செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

கடி

DIN | Published: 22nd June 2019 10:39 AM

* "சுத்தம் சோறு போடும்ங்கறாங்களே அதுலே எனக்கு ஒரு டவுட்றா!....''
"என்ன டவுட்?''
"அந்த சோறு பச்சரிசியிலேயா?.... 
புழுங்கலரிசியிலேயா?.....
பொன்னி அரிசியிலேயா?....''
விஜயா, தணிகாசலம் நகர்.

* "என்ன சார் இது?...நான் வந்து ரெண்டு மணி நேரமாச்சு! உங்க பிள்ளையைக் காணோமே! விளையாடப் போயிருக்கானா?'' 
"தெரியலே!'' 
"என்ன இப்படி சொல்றீங்க!...'' 
"நான்தான் அப்பவே சொன்னேனே!.... என் பிள்ளை இருக்கிற இடமே தெரியாதுன்னு!'' 
கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

* "இலட்சத் தீவு எங்கே இருக்கு சொல்லு பார்க்கலாம்?''
"இதென்ன சார் பெரிய விஷயம்!.... கடலிலேதான் சார்!'' 
நெ.இராமன், சிவாலயா, 13/119 திருவள்ளுவர் தெரு, பொழிச்சலூர்,
சென்னை - 600074.

* "நான் ஒரு புத்தகம் மாதிரிடா!...''
"அதான் உங்கப்பா உன்னை
புரட்டிப் புரட்டி எடுக்கிறாரா?''
கே.இந்து குமரப்பன், விழுப்புரம். 

* " இந்த மாசம் எங்க வீட்டுக்கு டெலிஃபோன் பில் எக்கச்சக்கமா வந்திருக்கு!...''
"அப்படியா?... ஆச்சரியமா இருக்கே!... எங்க வீட்டுக்கு ஒரே ஒரு பில்தான் வந்திருக்கு!''
கு.அருணாசலம், தென்காசி.

* "ராமு, ... நான் பாதி பழமொழி சொல்லுவேன்!.... பாக்கி பாதிய நீ சொல்லணும்!...
ஓ.கே.வா?''
"ஓ.கே!.... சொல்லு!''
"ஒரு பானை சோத்துக்கு.....?''
"ஒரு சட்டி குழம்பு!...''
விஜயா, 95, தணிகாசலம் நகர், "சி' பிளாக், 3 ஆவது குறுக்குத் தெரு, 
பொன்னியம்மன் மேடு, சென்னை - 600010.
வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பிஞ்சுக் கை வண்ணம் - II
பிஞ்சுக் கை வண்ணம் - I
அங்கிள் ஆன்டெனா
எறும்புகள்!
மரங்களின் வரங்கள்!: பூவரசம் மரம்