நினைவுச் சுடர் !: தரிசனம்! 

காலையில் எழுந்த பக்த கவி  சூர்தாசர்தன் நித்திய அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டார்.
நினைவுச் சுடர் !: தரிசனம்! 


காலையில் எழுந்த பக்த கவி  சூர்தாசர்தன் நித்திய அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டார். பின்பு பூஜையில் அமர்ந்தார். அவருக்கு பத்ரிநாதர் கோயிலுக்குச் செல்ல வேண்டும்போல் இருந்தது. மனைவியிடம் கூறிவிட்டுப் புறப்பட்டார். தடியை ஊன்றிக்கொண்டு மெல்ல வழியை விசாரித்துக் கொண்டு பத்ரிநாதர் கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வழியில் சூர்தாசரின் நண்பர் அவரைச் சந்தித்தார். 

""இப்படி கஷ்டப்பட்டுக்கொண்டு எங்கு செல்கிறீர்கள் சூர்தாஸ்?'' என்று நண்பர் கேட்டார். 

""என் பிரிய பத்ரிநாதனைப் பார்க்கத்தான்!....'' என்றார் சூர்தாசர்.

""இதென்ன வேடிக்கையாயிருக்கிறது!....இதற்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா? ....  உமக்கோ கண் பார்வை இல்லை.... நீங்கள் எப்படி சுவாமியை தரிசிப்பீர்கள்?...'' 

அதற்கு சூர்தாசர், ""என்னால் பத்ரிநாதரைப் பார்க்க முடியாதுதான்!.... என்ன செய்வது எனக்கு அந்த பாக்கியம் இல்லை!.... ஆனால் பகவான் பத்ரிநாதர் என்னைப் பார்ப்பாரே!.... அது சிறந்த பாக்கியம் இல்லையா?....நான் கடவுளைப் பார்க்கிறோம் என்பதை விட கடவுள் நம்மைப் பார்க்கிறார் என்ற உணர்வும், எண்ணமும் உயர்வானவை!... பாக்கியம் நிறைந்தவை!.... அல்லவா?.... அதனால் எனக்கு எந்தக் கவலையும் இல்லை....'' என்றார் சூர்தாசர். 

நண்பரின் கண்களில் நீர் துளிர்த்தது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com