அங்கிள் ஆன்டெனா

அவனுக்குப் பாம்புக் காது என்று நிறையப் பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். பாம்புகளுக்கு காது உண்டா?

கேள்வி: அவனுக்குப் பாம்புக் காது என்று நிறையப் பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். பாம்புகளுக்கு காது உண்டா?

பதில்: பாம்புகளின் காதுகளை யாராவது பார்த்திருக்கிறீர்களா? பாம்புகள் ஏறக்குறைய டமாரச் செவிடுகள்தான். 

இருந்தாலும் மிக மெல்லிய அசைவுகளைக் கூட நில அதிர்வைக் கொண்டு துல்லியமாகக் கணித்துவிடும் சக்தி பாம்புக்கு உண்டு. இதனால்தான் பாம்புக்காதுக்காரன் என்று வழக்கமாகச் சொல்லி வந்திருக்கிறார்கள் போலும்.
இருந்தாலும் பாம்பாட்டி மகுடி எடுத்து வாசிக்கும்போது பாம்பு எப்படி ஆடுகிறது தெரியுமா? பாம்பாட்டியின் அசைவுகளுக்கேற்பத்தான் பாம்பும் ஆடும். நன்றாக உற்றுக் கவனித்தால் அவன் வலது புறம் கைகளை அசைத்து வாசித்தால் பாம்பும் வலது புறமும் இடதுபுறமாக மகுடி வாசித்தால் இடது புறமுமாக பாம்பு அசைவதைக் கண்டு கொள்ளலாம். 

பாம்பாட்டி கைகளையும் தலையையும் மகுடியையும் அசைக்காமல் நிலையாக வாசித்தால் பாம்புக்கு அநேகமாக போரடித்து, தனது கூடைக்குள் திரும்பி விடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com