30-11-2019 சிறுவர்மணி இதழில் விநோத உலகம் பகுதியில் நாவல் பழம் பற்றிய அலசல் அருமை! நினைவுச் சுடரில் வள்ளல் அழகப்ப செட்டியார், நேரு பற்றிய செய்தி மனதிற்கு நிறைவாக இருந்தது.
திருமதி தவமணி கோவிந்தசாமி, திண்டிவனம்.
காது கேளாதோரும் இசையை ரசிக்கும் வண்ணம் தயாரிக்கப்பட்ட உடை பற்றிய செய்தி மிக அருமை! லியானார்டோ பயிரிட்ட 70 எம்.எம். சைஸ் பூசனிக்காயைப் பார்த்து மிரண்டு போனோம்!
அ.யாழினி பர்வதம்,
சென்னை.
அரங்கம் பகுதியில் வெளிவந்த "நட்பு' நாடகம் மிக அருமை! நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் என்ற கருத்துள்ள சீன அதிபரின் குட்டிக் கதை, "நல்லதை நினைத்தால்...' மிக அருமையாக இருந்தது.
எம்.சம்பத்குமார், ஈரோடு.
என்ன? எங்கே? எப்பொழுது? பகுதியில் வெளியான அலகாபாத் பிரயாக் திருவேணி சங்கமம் பகுதியில் சந்தோஷமாய்ப் பறக்கும் பறவைகள், போலந்து கால்பந்து விளையாட்டு வீரர் தன் மகனுடன் வெற்றியைக் கொண்டாடும் காட்சி இரண்டுமே வெகு ஜோர்!
சு.ஆறுமுகம், கழுகுமலை.
நினைவுச் சுடர் பகுதியில் வள்ளல் அழகப்ப செட்டியார் பற்றிய செய்தி மிகமிக அருமை! விக்ரமாதித்தனின் நேர்மையும், கருணையும் சிறந்த பாடம்! பெஞ்சமின் ஃப்ராங்ளின் பொன்மொழிகள் அனைத்தும் சிறப்பானவை! பின்பற்றப்பட வேண்டியவை! முத்துக் கதையில் சுயநலமும், பொதுநலமும் பற்றிய விளக்கம் நெகிழ்ச்சியாக இருந்தது!
எஸ்.ஆனந்தன், ஆரணி.
ஆத்தி மரம் பற்றிய அரிய தகவல்களை அள்ளித் தந்தது மரங்களின் வரங்கள் பகுதி. "வாழை போல் வாழ்' பாடல் வாழையின் சிறப்பை அருமையாகப் பறிமாறியது! நாயைத் தாயாக எண்ணிய கரடிக்குட்டி தகவல் வியப்பாக இருந்தது!
எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
மன்னனின் கருணை படித்தேன். பிற உயிரைக் காப்பாற்றுவதிலும் தர்மத்தைக் கடைப்பித்த மன்னன் பாராட்டுக்குரியவனே! முத்துக்கதை, "சுயநலமும் பொதுநலமும்' சூப்பர்! அரங்கம் பகுதியில் "நட்பு' என்னும் நாடகம் நட்பின் இலக்கணத்தை அழகாகச் சொல்லியது. கண்ணனும், ஆனந்தியும், விநோத உலகத்தில் நாவல் பழத்தின் அருமை, பெருமைகளை அருமையாக விளக்கினார்கள்.
பி.கே.ஜீவன், கும்பகோணம்.
பிஞ்சுக் கை வண்ணம் பகுதி மனதைக் கவர்ந்தது! "வாழை போல் வாழ்' பாடல் நெஞ்சை நிறைத்தது!
அ.சாய் பிரேம பாலா,
திசையன்விளை.
ஆடுகளம் பகுதி அமர்க்களமாய் இருந்தது. கடி ஜோக்குகள் அனைத்தும் வெடிச்சிரிப்பை வரவழைத்தன. பப்லு கார்ட்டூன் மிக அருமை!
எஸ்.கார்த்திக், பெங்களூரு.
கருவூலம் பகுதியில், விண்ணில் பெண்கள், .... குண்டு குண்டு பூசனிக்காய்,..... நாயைத் தாயாக எண்ணி,.... இவை மூன்றும் முத்தாக இருந்தன. வியப்பாகவும், விந்தையாகவும் இருந்தன. என்ன? எங்கே? எப்பொழுது? பகுதியில் வந்த படங்கள் மிகமிக அருமை! மகனுடன் விளையாட்டு வீரர் வெற்றியைக் கொண்டாடும் காட்சி சூப்பர்!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
பெஞ்சமின் ஃபிராங்ளின் பொன்மொழிகள் அனைத்தும் அருமை! சுயநலமற்ற அன்பே உண்மையானது என்பதை நிரூபித்த முத்துக்கதை சிறப்பாக இருந்தது. "வாழை போல் வாழ்' பாடல் மிகமிக அருமை! பாராட்டுகள்!
என்.பி.எஸ்.மணியன், மணவாளநகர்.
ஆத்தி மரம் குறித்த தகவல்கள் "ஆத்தி!' .... என எங்களை வியப்பில் ஆழ்த்தின! சிறுவர்மணி கையில் கிடைத்ததும் ஆர்வமாகத் தேடிப் படிக்கும் பகுதியாக "மரங்களின் வரங்கள்' தொடர் உருவெடுத்துள்ளது! ஒவ்வொரு வாரமும் அரிய தகவல்களைத் தெரிந்து கொள்கிறோம்!
சாய் ஜெயந்த், பூந்தமல்லி.
வசீகரன் படைத்த "வாத்தும் கொக்கும்' கதைப்பாடல் மிகச் சிறப்பாக இருந்தது! கருவூலம் பகுதியில் விண்ணில், பெண்கள், இசைச் சட்டை, குண்டுப் பூசனி, தகவல்கள் அனைத்தும் அருமை! பாராட்டுகள்!
அ.பொருநை பாலு, திருநெல்வேலி.
விநோத உலகம் பகுதியில் வந்த பாடல் விவேக சிந்தாமணியில். சீவக சிந்தாமணியில் அல்ல.
ஜெயராமன், பேரூர்.