நிதானத்தின் சிறப்பு!

அஸ்வத்தன் எதிலும் அவசரப்படுபவன்! ஒரு முறை மலையின் உச்சியின் முளைத்திருந்த ஒற்றைப்பலாக்கனியைப் பறிக்கச் சென்றான். அது நன்றாகப் பழுத்திருந்தது!
நிதானத்தின் சிறப்பு!

அஸ்வத்தன் எதிலும் அவசரப்படுபவன்! ஒரு முறை மலையின் உச்சியின் முளைத்திருந்த ஒற்றைப்பலாக்கனியைப் பறிக்கச் சென்றான். அது நன்றாகப் பழுத்திருந்தது! வாசனையும் மூக்கைத் துளைத்தது! அதைத் தவிர அந்த மரத்தில் வேறு கனிகளில்லை! கஷ்டப்பட்டு மரத்தில் ஏறி அதைப் பறித்தும் விட்டான் அஸ்வத்தன்! பழத்தைக் கீழே போட்டான்! அது சற்றே பிளந்து மேலும் வாசனையை அள்ளி வீசியது! அஸ்வத்தனுக்கு அதை உடனே ருசி பார்க்க வேண்டும் போலிருந்தது. அவன் கையில் கத்தியோ, பலாப் பிசின் ஒட்டாமலிருக்கு எண்ணையோ இல்லை! மலையின் முகட்டிலிருந்த கல்லில் அதை ஓங்கி அடித்தான்!  படார் என்று பிளந்த பலாக்கனி உச்சியிலிருந்து மலையின் அடிவாரத்திற்கு உருண்டு விட்டது!  மலையின் அடிவாரத்திற்கு வந்து சேருவதற்குள் அதை வேறு சில கிராமத்துச் சிறுவர்கள் ருசுத்துக் கொண்டிருந்தனர்! அஸ்வத்தனுக்கு அவர்கள் கனியில் மீதமிருந்த  ஒரே ஒரு சுளையைக் கொடுத்தனர்! பாவம்! அவனுக்குக் கிடைத்தது அவ்வளவுதான்! கனி தீர்ந்து விட்டது!   

ஒரு முறை அஸ்வத்துக்கு தற்பாதுகாப்புக் கலையைக் கற்க ஆசை வந்தது. அது பற்றி விசாரித்துக்கொண்டிருந்தபோது அதை நன்றாகக் கற்றுக்கொடுக்கக்கூடிய நந்தர் என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டான். எனவே அவரைத் தேடிப் புறப்பட்டான்.

நந்தரை அடைந்த அஸ்வத்தன், அவரிடம், ""எனக்கு தற்பாதுகாப்புக் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும்!.... சீக்கிரமாக!.... அதற்கு எவ்வளவு நாளாகும்?''  என்று கேட்டான்.

நந்தர், அஸ்வத்திடம், ""சீக்கிரமாகவெல்லாம் கற்க முடியாது!.... நீ ஒழுங்காகப் பயிற்சி செய்தால் ஐந்து வருடங்கள் ஆகலாம்!... '' என்றார்.


அஸ்வத்திற்கு அதெற்கெல்லாம் பொறுமை இல்லை!... அவன் நந்தரிடம், ""நான் தினமும் இரண்டு பங்கு பயிற்சி செய்கிறேன்!.... அதிக நேரம் அதற்காக ஒதுக்குவேன்!... அப்படியானால் எவ்வளவு காலத்தில் கற்றுக்கொள்ளலாம்?'' என்று கேட்டான்.

நந்தர் சிரித்துக் கொண்டே, ""அப்படியா ரொம்ப சரி!.... அப்படி நீ இரண்டு பங்கு பயிற்சியும், அதிக நேரம் ஒதுக்குவதானால் உனக்குப் பத்து வருடங்கள் தேவைப்படலாம்!'' என்று கூறினார். 

அஸ்வத்தன் அதிர்ந்து போனான்!... ""என்ன இது?.... நான் இரண்டுபங்கு நேரம் பயிற்சி செய்தால் சீக்கரமாக அல்லவா கற்றுக் கொள்ள வேண்டும்?... நீங்க ரெண்டு பத்து வருடமாகும்னு சொல்றீங்களே!'' என்று கேட்டான்.

நந்தர் அஸ்வத்திடம், ""இதோ பாரப்பா!... நீ ரொம்ப அவசரப்படுகிறாய்!.... அதனால் நிறையப் பிழைகள்  செய்வாய்!.... அவசரத்தால் நீ செய்யும் பிழைகளைத் திருத்த ஐந்து வருடம் கூட ஆகும்!.... ஆனால் நீ நிதானமாக நான் சொல்வது போல் செய்து கொண்டிருந்தால் தானே உனக்கு ஐந்து வருடத்தில் தற்காப்புக் கலையில் தேர்ச்சி வந்துவிடும்!...'' என்றார். 

அவசரத்தைவிட நிதானம் மிக முக்கியம் என்பதை அஸ்வத்தன் தெரிந்து கொண்டான். அவனுக்கு பலாப்பழம் பற்றிய ஞாபகம் வந்தது!    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com