கடி

"இல்லை அங்கே இருக்கறவங்கதான் தமிழ் தெரியாம எங்கிட்டே கஷ்டப்பட்டாங்க!....''
கடி

• "மும்பைக்குப் போனியே!.... 
இந்தி தெரியாம கஷ்டப்பட்டியா?...''
"இல்லை அங்கே இருக்கறவங்கதான் தமிழ் தெரியாம எங்கிட்டே கஷ்டப்பட்டாங்க!....''
பொ.பாலாஜி, 11/12, ராஜேந்திரா கார்டன், சிவபுரி மெயின் ரோடு, 
அண்ணாமலை நகர் - 608002.

• "எதுக்குடா ஒரு காதுலே பஞ்சை 
அடைச்சிக்கிட்டு இருக்கே!...''
"அதுவா!.... நான் பாடத்தை ஒரு காதிலே வாங்கி ஒரு காதிலே விட்டுடறேனாம்!.... வாத்தியார் சொன்னார்!....''
ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.

• "சொன்ன பேச்சைக் கேக்கலேன்னு எங்கம்மா என்னை ரொம்பத் திட்டினாங்கடா!....''
"அம்மா என்ன சொன்னாங்க?....''
"என்ன சொன்னாங்கன்னே தேரியலேடா.... அதான் நான் அவங்க சொன்ன பேச்சைக் கேட்கவே இல்லியே!....''
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

• " முள்ளை முள்ளாலேதான் எடுக்கணும்!....''
"ஏன் அப்படிச் சொல்றே?...''
"கையாலே எடுத்தால் குத்திடுமே!....''
சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

• அதிகாரி : "என்ன சார் இவன்... 
"அரம் செய இரும்பு' ன்னு எழுதியிருக்கான்?....''
ஆசிரியர் : "இவன் இரும்புப் பட்டறைக்காரரோட பையன் சார்!....''
திருப்பதி வெங்கண்ணா, 46/3, 
ஈரோடு ரோடு, பெருந்துறை - 638052

• "லீவு லெட்டர்லே, திருவோடு ஆசிரியருக்கு....ன்னு எழுதியிருக்கியே...என்னடா இது?''
"பெரியவங்களுக்கு, ஆசிரியருக்கு எழுதும்போது திருவோடு சேர்த்துத்தான் எழுதணும்னு நீங்கதானே சொன்னீங்க?...''
தீ.அசோகன், சென்னை.
வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com