வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

அங்கிள் ஆன்டெனா

DIN | Published: 27th April 2019 11:24 AM

கேள்வி: இரவில் வரும் நிலவினால் தாவரங்களுக்கு ஏதாவது பயன்கள் உண்டா?
 பதில்: நிலவின் ஒளி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் என்பது பொதுவான நம்பிக்கை.
 தாவரங்கள் பச்சையம் தயாரிப்பதற்கு ஒளி மிகவும் அவசியம். அப்படியானால் நிலவின் மூலம் அவற்றுக்கு ஒளி கிடைக்கத்தானே செய்கிறது? அப்படியானால் நிலவின் ஒளி மூலமும் தாவரங்கள் பச்சையம் தயாரிக்கலாமேஎன்று நாம் நினைக்கலாம்.
 ஆனால் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் சக்திக்கும் நிலவின் ஒளி மூலம் கிடைக்கும் சக்திக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அதன்படி பார்த்தால் நிலவின் ஒளியை வைத்துக் கொண்டு தாவரங்கள் பச்சையம் தயாரிக்கவே முடியாது என்பதுதான் உண்மை. ஆம், தாவரங்களுக்கும் நிலவின் ஒளியால் எந்தப் பயனும் இல்லை.
 ஆனால், நிலவின் வளர்பிறை, தேய்பிறை காலங்களில் தாவரங்களின் வளர்ச்சி ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 - ரொசிட்டா
 அடுத்த வாரக் கேள்வி
 விமானத்தால் நடுவானில் நிலையாக சற்று நேரம் நிற்க முடியுமா? மேலும் விமானத்தால் பின்னோக்கிப் பறக்க முடியுமா
 (கார் ரிவர்ஸில் செல்வது போல) ?
 பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம்
 நல்ல பதில் கிடைக்கும்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தேவதை தந்த பரிசு
அங்கிள் ஆன்டெனா

 ஊட்டச் சத்து சுரங்கம் கொடுக்கா புளி மரம்
 

பொருத்துக...
புதிர்