தேவையான பொருள்கள்:
புதினா, கொத்தமல்லி- தலா 1 கிண்ணம்
சுக்கு- சிறுதுண்டு
கறுப்பு உப்பு- சுவைக்கேற்ப
சர்க்கரை- அரை மேசைக்கரண்டி
சீரகம்- 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல்- 6
உலர்ந்த மாங்காய் தூள்- 1 மேசைக்
கரண்டி
செய்முறை:
ADVERTISEMENT
மாங்காயை நறுக்கி நல்ல வெயிலில் காய வைத்து, மிக்ஸியில் பொடித்து உலர்ந்த மாங்காய்த் தூள் செய்யவும். புதினா, கொத்தமல்லியை கழுவி காய வைத்து, தூள் செய்யலாம். இத்துடன் மீதிப் பொருள்களைச் சேர்த்து மிக்ஸியில் பொடித்தால் கமகமவென்று பானிபூரி மசாலா தயார்.