தேவையான பொருள்கள்:
பலாச்சுளைகள்- 25
பொடித்த வெல்லம்- 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல்- 1 கிண்ணம்
சுக்குத் தூள்- 2 மேசைக்கரண்டி
வாழை இலை- தேவையான அளவு
செய்முறை:
ADVERTISEMENT
பலாச்சுளைகள், வெல்லம், தேங்காய், சுக்குத்தூள் கலந்து அரைக்கவும். வாழை இலையை 2 அங்குல சதுரங்களாக வெட்டவும். இதனுடன் அரைத்த கலவையைத் தடவவும். இலையுடனே ஆவியில் வைத்து, 7 நிமிடங்களில் எடுக்கவும். இலையுடன் பரிமாறவும். சாப்பிடும்போது, இலையைப் பிரித்தால் அற்புதச் சுவையுடன் பலாப்பழ அடை கிடைக்கும்.