மகளிர்மணி

பல் வலி இருக்கிறதா..?

24th Sep 2023 05:34 PM | கோடம்பாக்கம் ஏ.எஸ்.கோவிந்தராஜன்

ADVERTISEMENT

 


இரண்டு கிராம்புகளை பல் வலியுள்ள இடத்தில் சிறிது நேரம் வைத்தால், வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

பல் வலி கண்டால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கல் உப்பைக் கரைத்து லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி கொப்பளித்து துப்பி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர பல் வலி, வீக்கம் குறையும். மேலும், கிருமிகள் அழியும்.

பூண்டு சிறிதளவு நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல் வலி படிப்படியாக குறையும்.

ADVERTISEMENT

கோதுமைப்புல் சாற்றை அருந்தி வர பல் வலி விலகும். ஒரு சிறிய தொட்டியில் கோதுமைகளைப் பதித்து தண்ணீர் விட்டு வர அதிலிருந்து புல் முளைக்கும். அதை சுத்தப்படுத்தி மைய அரைத்து சாறெடுத்து அருந்தலாம்.

பச்சை வெங்காயத்தைக் கடித்து மென்று சாற்றை விழுங்க பல் வலி குறையும். பல் சொத்தையும் தடுக்கும்.

கொய்யா இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று அதன் சாறை விழுங்கி சில நிமிடங்கள் இருக்கும்படி செய்தால் பல் வலி குறையும்.

காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளிக்க வெள்ளை நிறத்தில் நுரைத்து கொண்டு வரும் . அதை துப்பி விடவும். இப்படி சில நாள்கள் செய்ய வாயிலுள்ள பிரச்னைகள் அனைத்தும் விலகும்.

இஞ்சிச் சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல் வலி குறையும். சுக்குப் பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு வீக்கத்தில் உள்ள கெட்ட நீரை உறிஞ்சி பல்வலியை போக்கும்.

கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து அந்நீரால் வாய் கொப்பளித்தால் பல் வலி நீங்கி விடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT