மகளிர்மணி

சமையல் குறிப்புகள்

24th Sep 2023 05:36 PM | -எம். என்.

ADVERTISEMENT


வெண்டைக்காயை வறுக்கும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவாக இருக்கும்.

சாதம் குழைவாகத் தெரிந்தால், சிறிதளவு நல்லெண்ணெயைச் சேர்த்துவிட்டால் மேலும் குழையாது சாதம்.

கேசரி, பொங்கல், அல்வா ஆகியவற்றை கெட்டியான பிறகு இறக்கக் கூடாது. கொஞ்சம் முன்னதாக இறக்க வேண்டும். ஆறியவுடன் சரியான பதத்துக்கு அவை வந்துவிடும்.

பூரி தயாரிக்கும்போது, கோதுமை மாவை சோறு வடித்த தண்ணீரில் பிசைந்தால் பூரி மிகவும் சுவையாக இருக்கும்.

ADVERTISEMENT

சீடை, தட்டை, முறுக்கு செய்யும்போது சிறிது தேங்காய்ப் பால் விட்டுச் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT