மகளிர்மணி

போஜ்புரி ஆலு (பீகார்)

10th Sep 2023 12:00 AM | நொளம்பூர் ர.கிருஷ்ணவேணி

ADVERTISEMENT

 

தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு 4
தக்காளி, வெங்காயம்தலா  2
இஞ்சி சிறு துண்டு
பூண்டு 4 பல்
பச்சை மிளகாய் 5
முந்திரி 10
சீரகம் 1 மேசைக்கரண்டி
நெய் கால் கிண்ணம்
உப்பு தேவையான அளவு

செய்முறை: 

ADVERTISEMENT

ஒரு பூண்டை மிகப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, தக்காளி, பச்சை மிளகாய், சீரகம், 3 பல் பூண்டு சேர்த்து அரைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, வட்ட வில்லைகளாக நறுக்கவும், சூடான தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைக்கவும். நீரை வடித்து நெய்யில் வறுக்கவும். 

3 தேக்கரண்டி நெய்யை வாணலியில் சேர்க்கவும். அரைத்த விழுது, உப்பு, பொரிந்த உருளைக்கிழங்கு, தேவையான தண்ணீர் சேர்க்கவும். தளதளவென்று கொதித்ததும் அடுப்பை அணைக்கவும், 1 தேக்கரண்டி நெய்யில் நறுக்கிய பூண்டை சேர்த்து பொரித்து மேலாகச் சேர்க்கவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT