தேவையான பொருள்கள் :
மைதா 2 1/2 கிண்ணம்
உப்பு 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
தண்ணீர் தேவையான அளவு
பாதாம் பருப்பு 50 கிராம்
பிஸ்தா 50 கிராம்
வெண்ணெய் 125 கிராம்
வெள்ளைச்சர்க்கரை 1 1/4 கிண்ணம்
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, உப்பு, எலுமிச்சை சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்றாகப் பிசைந்து, 20 நிமிடங்கள் துணியை போட்டு மூடி ஊற வைக்கவும். மிக்ஸியில் பாதம், பிஸ்தா பருப்புகளை அரைத்து கொள்ளவும்.
20 நிமிடங்கள் கழித்து மாவை வெளியில் எடுத்து சாப்பாத்தி கட்டையில் வைத்து மெல்லிசாக தேய்த்து , நெய்யை தடவி ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, நடுவில் பாதம், பிஸ்தா பருப்பு கலவையை நிரப்பி, மீண்டும் தேய்த்து வைத்த மாவை மேலே வைத்து மூடவும். அடுத்து கத்தியை கொண்டு அதை, பப்ஸ் வடிவத்தில் வெட்டி, அதன்மீது வெண்ணெயை உற்றி மைக்ரோ ஓவனில் சுமார் 55 நிமிடங்கள் வேக வைக்கவும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரையை சேர்த்து பாகு காய்ச்சவும்.
மைக்ரோ ஓவனில் இருந்து வேக வைத்திருந்த பப்ஸ்களை வெளியில் எடுத்து அதில் சர்க்கரை பாகை ஊற்றி ஆறியதும் பரிமாறினால் சூடான ஸ்வீட் பப்ஸ் தயார்.