மகளிர்மணி

சமையல் குறிப்புகள்....

1st Oct 2023 12:00 AM

ADVERTISEMENT


பலகாரங்கள் செய்யும்போது எண்ணெய் பொங்கி வழிவதை தவிர்க்க இரண்டு மூன்று கொய்யா இலைகளை எண்ணெயில் போட வேண்டும்.

எந்தவிதமான பலகாரமாக இருந்தாலும்,  மாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசைந்தால் அதிக எண்ணெய் குடிக்காது. மாவை வெறும் வாணலியில் வறுத்து விட்டால் பலகாரம் மொறுமொறுவென்று இருக்கும்.

தேன் குழல் செய்யும்பொழுது,  உருளைக்கிழங்கு வேகவைத்து சேர்த்தால் சுவையும் மொறுமொறுப்பும் கூடும்.

சீடை முறுக்கு தட்டை எதுவானாலும் மாவில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் கலந்து செய்தால் சுவையும் மணமும் கூடும். சீடை மாவில் உப்பு கரைத்த நீர் விட்டு பிசைந்தால் சீடை வெடிக்காது . எண்ணெய் மிகவும் நிறைய காயக் கூடாது..

ADVERTISEMENT

முறுக்கு செய்யும்போது கடலை மாவை குறைத்து பொட்டுக்கடலை மாவை சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும் .

பொட்டுக்கடலை பொடியில் இனிப்புகள் செய்தால் சுவையாக இருப்பதுடன் சீக்கிரமும் செய்யலாம். நெய்யும் சர்க்கரையும் குறைவாக சேர்க்கலாம்.

ஓமப்பொடி செய்யும்போது ஓமத்தை தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி மாவில் போட்டு பிசையலாம். ஓமத்தை வறுத்து பொடித்து மாவில் சேர்க்கலாம்.

ரிப்பன் பக்கோடா செய்யும்போது,  அரிசி மாவு கடலை மாவுடன் இரண்டு தேக்கரண்டி உளுத்தம் மாவையும் சேர்த்துக் கொண்டால் எண்ணெய் அதிகம் குடிக்காது. கரகரப்பும் கூடும்.

சீடை செய்யும்பொழுது வெடிக்காமல் இருக்க சீடை மாவை உருட்டியதும் ஒரு குச்சியால் சிறு சிறு துளை போட வேண்டும்.

பச்சரிசி மாவு தட்டை என்றால் தட்டையை தட்டும் பொழுது அதன் நடுவில் மாவில் சிறு சிறு துளை இட வேண்டும். ஆனால் தான் தட்டை நன்றாக வெந்து இருக்கும்.

புழுங்கல் அரிசி மாவு தட்டை செய்வதென்றால் புழுங்கல் அரிசியையும் பச்சை மிளகாய் பெருங்காயத்தையும் போட்டு நன்றாக அரைத்து பிறகு துணியில் தட்டி ஈரம் லேசாக காய்ந்தவுடன் எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும்.

எந்தத் தட்டை செய்வதாலும் பாலித்தின் பேப்பரில் தட்டாதீர்கள் அதற்கு பதில் ஒரு வெள்ளை துணியை எடுத்துக் கொண்டு அதில் தட்டி பிறகு எண்ணெயில் போடவும்.

அவலை கேசரி போலும் செய்யலாம். அவலை இளம் சூடான வெந்நீரில் ஊறவைத்து நன்றாக அவல் ஊறி வந்தவுடன் வெல்லத்தை பாகு செய்து அதில் இந்த அவலைப் போட்டு கிளறி சிறிது நெய் விட்டு முந்திரிப் பருப்பு வறுத்து போட்ட அவல் கேசரி செய்யலாம்.

பச்சரிசியை களைந்து நன்றாக காய வைத்து பத்துஆழாக்கு அரிசி ஒரு ஆழாக்கு உளுத்தம் பருப்பு வீதம் லேசாக வாணலியில் பிரட்டி திரித்து வைத்துக் கொண்டால் தேன் குழல் தட்டை முறுக்கு எதையும் செய்யலாம்.
திருநெல்வேலி ஆர். ஜெயலட்சுமி

ADVERTISEMENT
ADVERTISEMENT