தேவையான பொருள்கள் :
ஆப்பிள் 2
எண்ணெய் 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
வெந்தயம் 1/4 தேக்கரண்டி
லவங்கம் சிறிதளவு
வெங்காயம் 1
சர்க்கரை சிறிதளவு
செய்முறை :
ஆப்பிளின் தோலைச் சீவிய பிறகு துண்டு துண்டாக நறுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், வெந்தயம், லவங்கம் ஆகியவற்றை வதக்கி நறுக்கிய வெங்காயத்தை போட்டு கிளறி, ஆப்பிளை போட்டு ஆப்பிள் பொன்னிறமானதும் சிறிதளவு சர்க்கரை போட்டு நன்றாக கிளறி இறக்கி சூடு ஆறியதும் வேறு பாத்திரத்தில் மாற்றவும். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகிய டிபன்களுக்கு சைட் டிஷ் ஆக தொட்டும் சாப்பிடலாம்.