மகளிர்மணி

அடை பிரதமன் 

1st Oct 2023 12:00 AM | பல்லாவரம் செளமியா சுப்ரமணியன்

ADVERTISEMENT

 

தேவையான பொருள்கள்:

பச்சரிசி  1 கிண்ணம்
நெய்  தேவையான அளவு
சர்க்கரை  1 கிண்ணம்
துருவிய தேங்காய்  2  மூடி
வெல்லம்  1/2 கிலோ
உலர் திராட்சை  1/4 கிண்ணம்
முந்திரிப் பருப்பு  1/4 கிண்ணம்
ஏலக்காய் பொடி  1 தேக்கரண்டி

செய்முறை:  

ADVERTISEMENT

பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் கொட்டி 2 மணி நேரம் காய வைக்கவும். பின்னர், அதை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் நைசாக அரைத்து,  மெல்லிய சல்லடையால் சலித்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும்  நெய் ஊற்றி, சர்க்கரை சேர்த்து வெதுவெதுப்பான நீரில் சப்பாத்தி மாவு போல பிசைந்து எடுத்தால் அடை மாவு தயார். 

இட்லி வேகவைக்கும் பாத்திரத்தில் பாதியளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துற், பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, அதை வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும். அடை நன்கு வெந்ததும் வெளியே எடுத்து ஆறியதும் இலையிலிருந்து அடையை தனியாக எடுத்து, சின்ன சின்ன துண்டுகளாக செய்யவும்.

தேங்காயை, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் 1/4 கிண்ணம் முதல் பால், 1/2 கிண்ணம் இரண்டாம் பால், 2 கிண்ணம் மூன்றாம் பால் என எடுத்து வைத்துக்கொள்ளவும். வானிலை அடுப்பில் வைத்து அதில் 1/4 கிண்ணம் நெய் ஊற்றி தயாரித்து வைத்த அடையை பொரித்து எடுக்கவும். வேறொரு பாத்திரத்தில், வெல்லம், சர்க்கரை மற்றும் மூன்றாவது தேங்காய் பால் சேர்த்து 10 நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க வைத்து பின்பு, இரண்டாம் பாலை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைத்து, முதல் பாலை ஊற்றி அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக கலந்து, ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT