தேவையானவை:
உரித்த நேந்திரம் பழத்தைப் பிசைந்த விழுது 3 கிண்ணம்
பால் ஒரு கிண்ணம்
தேங்காய்த் துருவல் 1 கிண்ணம்
உருக்கிய நெய் அரை கிண்ணம்
சர்க்கரை 2 கிண்ணம்
வெனிலா எசன்ஸ் சிறிது
தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சர்க்கரையை கம்பிப் பாகாகக் காய்ச்சி பாலை தண்ணீரில் கலந்து, இந்தப் பாகில் சேர்க்க வேண்டும். நேந்திரம் பழம், சர்க்கரை, தேங்காய்த் துருவல், நெய் ஆகியவற்றை அடுப்பிலிருக்கும் பாகுடன் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். கலவை கெட்டியாக வரும் நேரம் எஸன்ஸை சேர்த்து கலக்கி இறக்கவும். ஒரு அகலமான தட்டில் நெய் தடவி சாக்லெட் கலவையை விட்டு சிறிது ஆறியவுடன் சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.