மகளிர்மணி

புளுங்கறி

28th May 2023 12:00 AM | ஆர்.ஜெயலட்சுமி

ADVERTISEMENT

 

தேவையானவை:

பூசணிக்காய் கால் கிலோ
பரங்கிக்காய் கால் கிலோ
வாழைக்காய் 3
சேனைக்கிழங்கு கால் கிலோ
புளி ஒரு உருண்டை
தேங்காய் 2 சிறியது
தனியா 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் 6
பச்சை மிளகாய் 2
பச்சரிசி 100 கிராம்
வெல்லம், வெந்தயம் சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையான அளவு

செய்முறை: 

ADVERTISEMENT

காய்கறித்தோலைச் சீவீ பெரிய துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். புளியைத் தேவையான அளவு தண்ணீரில் கரைத்துகொள்ள வேண்டும். புளிக்கரைசல் சிறிதளவு மஞ்சள் பொடி, வெல்லம், தேவையான அளவு உப்பு சேர்த்து நறுக்கிய காய்கறித் துண்டுகளாகச் சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.  ஒரு தேங்காயைத் துருவ வேண்டும். தனியா, கடலைப்பருப்பு, நான்கு மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுத்துத் தேங்காய்த் துருவலோடு சேர்த்து வெண்ணெயாக அரைக்க வேண்டும். மீதியிருக்கும் மற்றொரு தேங்காயைத் துருவி, பச்சை மிளகாயோடு சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். 

பச்சரிசியை வெறும் வாணலியில் வறுக்க வேண்டும். அரிசி சிவந்து வாசனை வரும்போது, வற்றல், மிளகாய், இரண்டு வெந்தயம் சேர்த்து அவற்றை வறுத்து பொடி செய்துகொள்ளவும். வேக வைத்த காய்கறியில் முதலில் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் இரண்டாவதாக அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்து கொதிக்க வைத்து பொடியைச் சிறிதளவு தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்துகொண்டு அதையும் சேர்க்கவும். நன்றாகக் கலந்து கொதித்தவுடன் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT