மகளிர்மணி

தேங்காய் தண்ணீரை குடிப்பதால்...!

கவிதா சரவணன்

தேங்காய் உடைக்கும்பொழுது கிடைக்கும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் ஏற்படும்  பயன்கள்:

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சிறுநீர்ப் பாதை தொற்றுகள்,  ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள், காய்ச்சல்,  சளி,  இருமலை ஏற்படுத்தும் தொற்றுகளை அழிக்கும். 

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் குடித்துவந்தால்,   தைராய்டு சுரப்பியைச் சீராகச் செயல்பட வழிவகுக்கும்

செரிமான பிரச்னை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாள்கள் குடித்துவந்தால்,  குணம் பெறலாம். தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால், வாய்வுத் தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.

தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்பு சேராது. இதனை குடித்தால்,  பசி கட்டுப்படுவதோடு,  உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கலாம்.

தினமும் காலையில் ஒரு கிண்ணம் தேங்காய் தண்ணீர் குடித்தால்,   ,உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

தினமும் ஒரு கிண்ணம் தேங்காய் தண்ணீர் குடித்துவந்தால்,  உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.

கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்துவந்தால்,  கர்ப்பக் காலத்தில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT