மகளிர்மணி

முள்ளங்கி தேப்ளா

4th Jun 2023 12:00 AM | -ஆர்.ஜெயலட்சுமி

ADVERTISEMENT

 

தேவையானவை:

கோதுமை மாவு- 400 கிராம்
முள்ளங்கி- 2 தோல் சீவி கழுவியது
பச்சை மிளகாய்- 4  பொடியாக நறுக்கியது
கொத்மல்லி- 1 பிடியளவு
பெருங்காயம்- 1 சிட்டிகை
மஞ்சள்பொடி- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

ADVERTISEMENT

முள்ளங்கித் துருவலைத் தவிர, மற்றவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும். பிறகு முள்ளங்கியைப் பிழிந்து எடுத்து,இதனுடன் சேர்த்து பிசைய வேண்டும்.  தேவையான தண்ணீர் சேர்த்துகொள்ள வேண்டும். பதமாகப் பிசைந்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வட்டமான சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் தாராளமாய் எண்ணெய்விட்டு பொன்னிறமாக எடுத்து சாப்பிடவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT