தேவையானவை:
உருளைக்கிழங்கு- 400 கிராம்
பச்சை மிளகாய்- 6
கொத்தமல்லி இலை- 1 கட்டு
பிரட் தூள்- 200 கிராம்
பூரணம் செய்ய..:
முந்திரிப் பருப்பு- 25 கிராம்
வேர்க்கடலை- 25 கிராம்
பிஸ்தா- 25 கிராம்
கிஸ்மிஸ்- 25 கிராம்
மிளகாய்ப் பொடி- 1 தேக்கரண்டி
சீரகப் பொடி- 1 தேக்கரண்டி
அக்ரூட் பருப்பு-6
உப்பு, நல்லெண்ணெய்- தேவையான அளவு
தேங்காய்- அரை மூடி
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உப்பு சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் எல்லா பருப்பு வகைகளையும் நன்றாக வறுத்தெடுத்து தேங்காய்த் துருவலையும் சிவக்க வறுத்தெடுத்து இதனுடன் உப்பு,மிளகாய்த் தூள், சீரகப் பொடி கலந்து நன்றாகப் பிசைந்து பூரணம் தயாரிக்க வேண்டும். உருளைக்கிழங்குடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மிளகாய்ப் பொடி கலந்து பிசைய வேண்டும். இதை குட்டி குட்டி கிண்ணம் போலச் செய்து இதனுள் சிறிதளவு பூரணம் வைத்து ஓரங்களை மூடி கொட்டித் தாளில் புரட்டி நடுவே அக்ரூட் பருப்பை நட வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் கட்லெட்டை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.