மகளிர்மணி

அழகுக் குறிப்புகள்...

4th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT


வெட்டிவேர் பொடி, நெல்லிப்பொடி, பன்னீர் சேர்த்து பசையாக்கி வியர்குரு இருக்கும் இடத்தில் தேய்த்து இரண்டு மணி நேரம் ஊறவிட்டு குளித்தால், சரியாகிவிடும்.

மாதுளம் பழச்சாறு, பன்னீர் இரண்டையும் சரிவிகிதம் சேர்த்து கண்களுக்குக் கீழ் தடவி, கண்ணுக்கு மேலே வெள்ளரி துண்டு வைத்துவிட்டு தூங்கினால் போதும். கண்கள் புதுப்பொலிவுறும்.

 பால் காய்ச்சும்போது வரும் ஏடு எடுத்து, அதில் நெல்லிச்சாறு கலந்து உதட்டில் பூசினால் உதடுகள் சிவக்கும்.

கடலை மாவு, அரிசி மாவு ஆகியன ஒரு தேக்கரண்டி, பன்னீர் இரு தேக்கரண்டி, 2 சொட்டு ஆரஞ்சுச்சாறு கலந்து கழுத்துப் பகுதியில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து, கழுவினால் போதும். கருமை நிறம் நீங்கும்.

ADVERTISEMENT

 பேரீச்சம் பழங்களை தேனில் ஊற வைத்து, 20 நிமிடங்கள் கழித்து அரைக்க வேண்டும். இதை வைத்து பேஷியல் செய்து, மசாஜ் பண்ணுங்கள். பார்லரில் செய்ததுபோன்ற எபெக்ட் உண்டு.

வறண்ட சருமம் உள்ளவர்கள் பப்பாளி பழச்சாறு, அரை தேக்கரண்டி தேன், சிறிதளவு சந்தனத் தூள் கலந்து முகத்தில் பூசினால் ஜொலிக்கும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT