மகளிர்மணி

பாசிப் பருப்பு பொங்கல்

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

பச்சரிசி- 100 கிராம்
பாசிப் பருப்பு- 50 கிராம்
வெல்லம்- 200 கிராம்
நெய்-100 கிராம்
முந்திரி- 10
திராட்சை-10
ஏலக்காய்த் தூள்- அரை தேக்கரண்டி

செய்முறை; 

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு காய்ந்ததும் பாசிப்பருப்பை போட்டு, நல்ல வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். வறுத்த பருப்பை களைந்த அரிசியுடன் சேர்த்து, குக்கரில் போட்டு ஐந்து கிண்ணம் தண்ணீரில் சேர்த்து மூடி, இரண்டு விசில் வந்ததும், தீயைக் குறைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து இறக்க வேண்டும். பிரஷர் அடங்கியதும் பால் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அரை கிண்ணம் தண்ணீரில் வெல்லத்தை சேர்த்து கரையும் வரை கொதிக்கவிட வேண்டும்.  வடிகட்ட வேண்டும். வடிகட்டிய வெல்லப் பாகை சாதத்துடன் சேர்த்து நன்றாகச் சேர்ந்துவரும் வரை கிளறி இறக்க வேண்டும். பின்பு, ஏலக்காய்த் தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்றாகக் கிளறவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT