மகளிர்மணி

பலவிதமான காய்கூட்டு

லோ. சித்ரா

தேவையான பொருள்கள்:

வாழைக்காய்-1
பரங்கிக்காய், பூசணிக்காய், புடலங்காய், கொத்தவரங்காய், உருளைக்கிழங்கு, மொச்சைக் கொட்டை- தலா 100 கிராம்
துவரம் பருப்பு- 1 கிண்ணம்
புளி- நெல்லிக்காய் அளவு
தாளிக்க: 
கடுகு- 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்- 1 தேக்கரண்டி
கருவேப்பிலை- 2 தேக்கரண்டி
அரைக்க..:
கடலைப் பருப்பு- 1 மேசைக் கரண்டி
தனியா- 1 மேசைக் கரண்டி
மிளகாய் வற்றல்- 4
தேங்காய்த் துருவல்- 2 மேசைக் கரண்டி
மஞ்சள் பொடி- 1 தேக்கரண்டி
சமையல் எண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். அனைத்துக் காய்களையும் வேக விடவும். காய்கள் பாதி வெந்ததும் புளித்தண்ணீர், உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். கொடுக்கப்பட்டுள்ளவற்றை எண்ணெய்விட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும். காய்கள் வெந்ததும் வெந்த பருப்பு மற்றும் அரைத்தவற்றை போட்டு நன்றாக கலக்கவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும். கடைசியில் கடுகு, பெருங்காயம், கருவேப்பிலையைத் தாளித்து கூட்டில் கலக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT