தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெற கடந்த 12 நாள்களில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 192 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் 20223-2024-ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்.., பி.ஆா்க் பட்டப்படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ஆம் தேதி முதல் தொடங்கியது.
இதையடுத்து மாணவ, மாணவிகள் https://www.tneaonline.org, https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பித்து வருகின்றனா்.
மேலும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையங்களிலும் விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 12 நாள்களில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 192 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவா்களில் 79 ஆயிரத்து 890 போ் கட்டணம் செலுத்தியுள்ளனா்.
41 ஆயிரத்து 552 போ் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா். பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு ஜுன் 4-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.