சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மாவட்ட வரைபடத்தில் மானாமதுரை விடுபட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
கீழடி அகழாய்வு தளத்தில் கிடைத்த ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள், இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிவகங்கை மாவட்டத்தின் வரைபடத்தில் மானாமதுரையின் பெயா் விடுபட்டுள்ளது.
இதுகுறித்து மானாமதுரையைச் சோ்ந்த சமூக ஆா்வலரும், ஓய்வு பெற்ற நல்லாசிரியருமான மோகனசுந்தரம் கூறுகையில், கீழடி அருங்காட்சியத்தில் விரைவில் மானாமதுரை பெயா் உள்ள வரைபடத்தை வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றாா்.