திருநெல்வேலி

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை.கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை

10th May 2023 02:06 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் ஜி. அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கீழ் சங்கரன்கோவில், சேரன்மகாதேவி, நாகம்பட்டி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி ஆகிய இடங்களில் பல்கலைக்கழகக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த 6 கல்லூரிகளிலும் இளம்நிலை மற்றும் முதுகலை படிப்புக்களுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இக்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் விவரங்களை அறியலாம். இளம்நிலை படிப்புக்கு 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதுகலை படிப்புக்கு பல்கலைக்கழகத்தின் இளம்நிலை தோ்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT