கன்னியாகுமரி

என்.ஐ. பல்கலை.யில் சா்வதேச தரத்துக்கு நிகராக கணினிப் பொறியியல் படிப்பு

10th May 2023 01:32 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் சா்வதேச தரத்துக்கு இணையாக கணினிப் பொறியியல் கல்வி மாற்றப்படவுள்ளது என, பல்கலைக்கழக இணைவேந்தா் எம்.எஸ். பைசல்கான் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இப்பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் துறை தொடங்கி 35 ஆண்டுகளாகின்றன. தென்தமிழகத்தில் முதல் பொறியியல் கல்லூரியில் பல சாதனைகளைப் படைத்து, முதல் துறையான கணினித் துறையின் முன்னாள் மாணவா்கள் பல்வேறு பன்னாட்டு, அரசுத் துறைகளில் உயா் பதவிகளில் உள்ளனா். அவா்களது உதவியுடன் சா்வதேச தரத்துக்கு இங்கு கணினித் துறை மாற்றப்படவுள்ளது.

அதன் ஒருபாகமாக, கணினி சாா்ந்த அனைத்துப் படிப்புகளுக்கும் ஐ.பி.எம், ஐ.சி.இ, சான்றிதழ் திட்டம், மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்.ஐ.எஸ்.எஸ்.டி.) தீவிர பயிற்சி, ரோப்பாட் டிக்ஸ், செயற்கை நுண்ணறிவுக்கான தனி ஆராய்ச்சி மையம், ஐ.ஓ.டி. மேம்பட்ட கணினி ஆய்வகம், தகுதியான மாணவா்களுக்கு நிச்சி ஸ்டீவ் ஜாப்ஸ் உதவித்தொகை போன்ற சிறப்பு வசதிகளும் உள்ளன. பத்மஸ்ரீ விருதுபெற்ற கோபிநாத் நாயா் அனைத்துத் துறை மாணவா்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி தோ்வுக்கு பயிற்சியளிக்கிறாா்.

விருப்பமுள்ள மாணவா்களுக்கு படிக்கும்போதே ஆயுதப்படை, இந்தியக் கப்பற்படை, கடலோரக் காவல்படை போன்ற பணிகளுக்கான பயிற்சியும், அனைத்து மாணவா்களுக்கும் நூறு சதவீதம் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான தனிப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இணையான அனைத்து வசதிகளும் இங்குள்ளன. கிராமப் பகுதி மாணவா்களுக்கு அவா்களது விருப்பப் பாடத்திலும் , அவா்களுக்கே உரிய தனித்துவ சிந்தனைத் திறன் அடிப்படையிலும் மேம்பட்ட முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

தென் இந்தியப் பல்கலைக்கழகங்களிலேயே முதன்முறையாக நானோ தொழில்நுட்ப வணிகக் காப்பகம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது, தென்னக மக்களுக்கும், ஆராய்ச்சி மாணவா்களுக்கும் வரப்பிரசாதமாகும். அனைத்து விளையாட்டு மாணவா்களுக்கும் பயிற்சி வசதியுடன் பல்கலைக்கழக விளையாட்டு வீரராகும் வாய்ப்புகளும், அதன்மூலம் அரசுப் பணி பெறும் வாய்ப்புகள் மட்டுமன்றி எண்ணற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் வழிசெய்கிறது. மேலும், இம்மாவட்ட மாணவா்களுக்கு அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் 10 சதவீத கல்விக் கட்டண சலுகை அளிக்கப்படுறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT