கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை வழக்கில் சிறையில் உள்ளவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
தோவாளை வட்டம், அருமநல்லூரைச் சோ்ந்தவா் பாக்கியராஜ் ( 41). திருவட்டாறு வட்டம் மணலிக்கரை அருகே அண்டம்பாறையில் வசித்து வந்த இவா், கொலை வழக்கில் கைதாகி நாகா்கோவில் சிறையில் உள்ளாா்.
மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண்பிரசாத்தின் பரிந்துரை, ஆட்சியா் பி.என். ஸ்ரீதரின் உத்தரவு ஆகியவற்றின்பேரில் திருவட்டாறு காவல் நிலைய ஆய்வாளா் ஜானகி நடவடிக்கை மேற்கொண்டு பாக்கியராஜை செவ்வாய்க்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தாா்.
இதன் மூலம், நிகழாண்டில் இம்மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில்
கைதானோரின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.