மகளிர்மணி

கஸ்தூரி வடை (தமிழ்நாடு)

25th Sep 2022 06:00 AM | ந.கிருஷ்ணவேணி

ADVERTISEMENT

 

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு, ரவை- தலா அரை கிண்ணம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
மிளகு- 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள், எள்- தலா அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
பச்சை மிளகாய்- 3 

செய்முறை: 

ADVERTISEMENT

துவரம் பருப்பை ஊற வைத்து, நீரை வடிக்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் பெருங்காயத் தூள், ரவை சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் மூடிவைக்கவும்.

சூடான எண்ணெயில் வடைகளைப் போட்டு, மொறு மொறுவென பொரித்து புதினா சட்னியுடன் பரிமாறவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT