மகளிர்மணி

ஜப்பானிய வீடுகளிலும் கொலு!

25th Sep 2022 06:00 AM | ராஜி ராதா

ADVERTISEMENT

 

நம்ம ஊர் வீடுகளில் நவராத்திரிக்கு கொலு வைப்பதுபோல், ஜப்பானிய வீடுகளிலும் கொலு வைக்கிறார்கள். ஆனால் ஒன்பது நாள்கள் அல்ல;  ஒரே ஒருநாள் மட்டுமே!

ஜப்பானியர்கள் இந்த விழாவை "ஹினா மாட்சுரி' என அழைக்கின்றனர். இதன் பொருள் பொம்மை தினம் அல்லது பெண் குழந்தைகள் தினம் என்பதாகும். 8-ஆம் நூற்றாண்டில் இருந்து இது நடைமுறையில் உள்ளது. இந்த விழா பெண் குழந்தைகளை வரவேற்பதுடன் அவளுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி கிடைக்கக் கொண்டாடப்படுகிறது. 

முன்பெல்லாம் பெரும் பணக்காரர்கள் மட்டுமே கொலு வைத்தனர். இன்று அனைத்து மக்களும் வைக்கின்றனர். 

ADVERTISEMENT

பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்களில் ஆர்வமாகக் கொண்டாடப்படுகிறது. இன்றும் கிராமப்புறங்களில் தங்களுடைய பெண் குழந்தை ஒரு நல்ல பணக்காரக் குடும்பத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஜப்பானில் அதிகமாக இருக்கின்றனர்.

பொம்மை கொலுவை எடுக்க நாள் கடத்த மாட்டார்கள். மாறாக, வேகமாக எடுத்துவிடுவார்கள். தங்களது வீட்டுப் பெண்ணுக்கு திருமணம் தள்ளிப் போகும் என்ற ஒரு நம்பிக்கையை அவர்கள் கொண்டுள்ளதால் இந்த முடிவு.

7 படிகளை அமைத்து, அதன் மீது சிவப்பு வண்ணத் துணியைப் போர்த்தி, உச்சிப் படியில் ஜப்பானிய ராஜா- ராணி பொம்மையை வைக்கின்றனர். அடுத்துவரும் படிகளில் ஜப்பானிய பிரபல பெண்கள், பாடகர்கள், அமைச்சர்கள், அவர்களுடைய உதவியாளர்கள் என பொம்மைகளை வைக்கின்றனர்.

6,7-ஆவது படிகளில் புதியதாகத் திருமணமாகிச் செல்லும் பெண்கள், அவர்களுடைய குடும்பத்துக்குத் தேவையானதை வைக்கின்றனர்.

கொலு முடிந்தவுடன் பொம்மைகளைத் துணிகளில் சுற்றி எடுத்து பத்திரமாய் பெட்டிகளில் வைத்து பாதுகாக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT