மகளிர்மணி

சமையல் டிப்ஸ்...

கே. பிரபாவதி


தக்காளி, காலிஃபிளவர் போன்ற காய்கறிகளில் சிறு பூச்சிகள் இருக்கும். அவைகளை உப்பு கலந்த தண்ணீருக்குள் சிறிது நேரம் போட்டு வைத்துவிட்டு, அதன்பின்னர் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

காரட்,  பீட்ரூட் வாடி போனால், அவற்றை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டுவைத்தால், புதியது போல் ஆகி
விடும். வெட்டவும் எளிதாகிவிடும். 

மாவடு நீண்ட நாள்கள் கெடாமல் இருக்க, மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் இருக்கும். நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

கோதுமையை லேசாக  வறுத்து மாவாக அரைத்து, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்தால், அதிக நாள்கள் கெட்டுப் போகாது.

பூண்டு கெட்டுப் போகாமல் இருக்க, கொஞ்சம் கேழ்வரகை சேர்த்து வைத்தால் நீண்ட நாள்கள் சுருங்காமலேயே இருக்கும்.

சலித்த சப்பாத்தி மாவுக் கட்டிகளை வீணாக்காமல் அடைமாவில் கலந்து அடை தயாரிக்க, அது சுவையாக இருக்கும்.

கூட்டு, குழம்பு ஆகியவற்றுக்கு அரிசி மாவைக் கரைத்து விடுவதற்குப் பதில், பொட்டுக் கடலை மாவைச்சேர்த்துவிட சீக்கிரம் கெடாது.

உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, சிறிதளவு துவரம் பருப்பை சேர்த்து அரைக்க வேண்டும். இப்போது வடை தயாரித்தால் மெதுவாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT