மகளிர்மணி

பாட்டி வைத்தியம்

2nd Oct 2022 06:00 AM | ஆர்.கே.லிங்கேசன்

ADVERTISEMENT

 


சுக்குப் பொடியுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட பித்தம் குறையும்.
சுக்குத் தூளோடு சர்க்கரையைச் சேர்த்து சாப்பிடுவதால் வயிற்றுவலி, வயிற்றுக்கடுப்பு உடனே குணமாகும்.
சுக்கை தண்ணீரில் குழைத்து களிம்பாக்கி நெற்றியில் பற்று மாதிரி தடவி வந்தால், தலைவலி குணமாகும்.
சுக்குப் பொடியோடு துளசி இலைகளைச் சேர்த்து கொதிக்க வைத்து, தேன் சேர்த்துச் சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.
சுக்குப் பொடியுடன் பூண்டுச் சாறு சேர்த்து சாப்பிட்டு வர கடுமையான வயிற்று வலி குணமாகும்.
சுக்குத் துண்டை வாயில் அடக்கிவைக்க பல்வலி கட்டுக்குள் வரும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT