மகளிர்மணி

பாஸ்தா சுண்டல் 

2nd Oct 2022 06:00 AM | லோ.சித்ரா

ADVERTISEMENT

 

தேவையானவை:

மக்ரோனி பாஸ்தா- அரை கிண்ணம்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு- கால் தேக்கரண்டி
வேர்க்கடலை- 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
பச்சை மிளகாய்-1
கரம் மசாலா- 2 சிட்டிகை
தேங்காய்த் துருவல்- 1 மேசைக் கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

ADVERTISEMENT

பாஸ்தாவில் உப்பு சேர்த்து,  10 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு எடுத்து மிருதுவாக வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வேர்க்கடலை சேர்த்து வதக்கவும். அதில் வேக வைத்த பாஸ்தாவை போடவும். 2 தேக்கரண்டி தண்ணீர் தெளித்து, கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் சிறிய தீயில் வைத்து வேக வைக்கவும். தேவைப்பட்டால் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து, இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT