மகளிர்மணி

பூண்டு பொடி 

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:

பூண்டு - 100 கிராம் 
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
எள் - 1/4  தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 12
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
புளி - சிறிதளவு
நாட்டு சர்க்கரை - 1 தேக்கரண்டி

செய்முறை: 

வாணலியை சூடாக்கி உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு போட்டு மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுக்கவும்.  பிறகு எள், பொட்டுக்கடலை, தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். மிளகாய் வற்றல், கறிவேப்பிலை,  சேர்த்து மொறு மொறுப்பாக வரும் வரை வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.பிறகு நல்லெண்ணெய் சேர்த்து பூண்டு லேசாக நசுக்கி சேர்த்து பொன்னிறமாக மொறு மொறுவென வரும் வரை வதக்கி தனியே எடுத்து வைக்கவும். பூண்டு நன்றாக வதக்கி கொள்ளவும். 

வறுத்த பூண்டு ஆறியபின்  மிக்ஸியில் போட்டு உப்பு, பெருங்காயத்தூள், புளி, நாட்டு சக்கரை சேர்த்து அரைத்து எடுக்கவும். ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும். பூண்டு பொடி தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

SCROLL FOR NEXT