மகளிர்மணி

பூண்டு சட்னி 

27th Nov 2022 06:00 AM | செளமியா சுப்ரமணியன்

ADVERTISEMENT

 

தேவையான பொருள்கள்:

பூண்டு - 20 பல்
நல்லெண்ணெய்- தேவையான அளவு
கடலைப்பருப்பு- ஒரு கைப்பிடி அளவு
கருவேப்பிலை- சிறிதளவு
புளி- தேவையான அளவு
காய்ந்த மிளகாய்- 6
கடுகு- தாளிக்க

செய்முறை:  

ADVERTISEMENT

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய்யை ஊற்றி பூண்டையும், கடலைப்பருப்பையும் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அவை ஆறியதும் அவற்றுடன்,கறிவேப்பிலை, புளி, காய்ந்த மிளகாய் இவற்றையெல்லாம் நன்கு அரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், நல்லெண்ணெய்யை ஊற்றி கடுகு, கருவேப்பிலையைத் தாளித்து, அரைத்து விழுதை சேர்த்து இறக்கவும்.  ஆரோக்கியமான பூண்டு சட்னி தயார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT