மகளிர்மணி

சமையல் குறிப்புகள்...

கவிதா சரவணன்

சோளப்பொறி அல்லது கோதுமைப் பொறியில் காரம் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிது கட்டித் தயிர் கலந்து, காலை உணவாகச் சாப்பிட்டால் கொழுப்பில்லாத சத்துணவாகச் சுவையுடன் இருக்கும்.

முறுக்கை உடைத்து மிக்ஸியில் தூள் செய்து கூட்டு, பொறியலில் தூவினால் மிகவும் சுவையாக இருக்கும்.

சீரகம், மிளகு இரண்டையும் நெய்யில் போட்டு வதக்கி, பொடி செய்து 5 சிறிய வெங்காயத்தை நறுக்கிப் போட்டு வதக்கி உப்பு கலந்து சாதத்தைக் கலந்து வையுங்கள். ஜீரா சாதம் தயார்.

ரவா தோசை செய்யும்போது, இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்றாக இருக்கும்.

உளுந்துவடை செய்யும்போது, மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுவென்று இருக்கும்.

கேசரி, பால்கோவா, தேங்காய்ப் பர்ப்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால், அடி பிடிக்காமல் எளிதாகக் கிளறலாம்.

தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி, சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, அரை கிண்ணம் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் சுவையாக இருக்கும்.

வெங்காய பகோடா செய்ய மாவு பிசையும்போது, வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசைந்தால், பகோடா ருசியாக இருக்கும்.

ஜாடியில் ஊறுகாய் போடும் முன்பு கொதிக்கும் எண்ணெயில் நனைத்த துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்து எடுத்த பின்பு, மூடினால் பூரணம் பிடிக்காமல் இருக்கும்.

அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து, சாப்பிடுவது உடல்நலத்துக்கு நல்லது.

வேப்பம்பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், ஜூரம் வராது.

 பால் புளிக்காமல் இருக்க ஏலக்காயை  காய்ச்சும்போதே சேர்த்தால், நீண்ட நேரம் பால் புளிக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT