மகளிர்மணி

திருவாதிரை தாளக் குழம்பு

20th Nov 2022 06:00 AM | இல.வள்ளிமயில்

ADVERTISEMENT

 

தேவையானவை:

பரங்கிக் காய், வாழைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு,  சேப்பங்கிழங்கு, சேனைக் கிழங்கு, கொத்தவரங்காய், பூசணிக்காய் எல்லாவற்றையும் ஒரே அளவாக நறுக்கியது- 3 கிண்ணம்
திக்கான புளி கரைசல்- 1 கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்- 1
வெல்லம் துருவியது- 1 மேசை கரண்டி
வறுத்து அரைக்க:
பச்சரிசி- 2 மேசை கரண்டி
கருப்பு எள்- 1 மேசை கரண்டி
காய்ந்த மிளகாய்- 5
தேங்காய் துருவல்- கால் கிண்ணம்
கடலைப் பருப்பு- 1 தேக்கரண்டி
தனியா- 2 தேக்கரண்டி
எண்ணெய்- 2 தேக்கரண்டி
பெருங்காயம்- அரை தேக்கரண்டி
தாளிக்க எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை-10 இதழ்கள்

செய்முறை: 

ADVERTISEMENT

ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் பச்சரிசி, எள் இரண்டையும் தனித்தனியே வறுத்து கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்த அனைத்துப் பொருள்களையும் வறுத்து, முதலில் வறுத்த அரிசி, எள்ளையும் சேர்த்து மிக்ஸியில்  தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அறுத்துவைக்கவும். 

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 2 கிண்ணம் நீர்விட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பச்சை மிளகாய், அரிந்த அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வேகவிட வேண்டும். காய்கள் அரை வேக்காடு வெந்ததும் புளி கரைசலையும் சேர்த்து தாளிக்கவிடவும்.

புளியுடன் சேர்த்து காய்கள் வெந்ததும், அரைத்த விழுதினையும் சேர்த்து துருவிய வெல்லத்தையும் சேர்த்து, கொதித்து வந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து கலந்து இறக்கவும். திருவாதிரைக் களியுடன் இந்தத் தாளக் குழம்பைத் தொட்டுச் சாப்பிடலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT