மகளிர்மணி

உருளைக்கிழங்கு பிரியாணி

20th Nov 2022 06:00 AM

ADVERTISEMENT

 

தேவையானவை: 

சிறிய உருளைக்கிழங்கு- 200 கிராம்
பாஸ்மதி அரிசி- 1 கிண்ணம்
இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
புதினா, கொத்துமல்லி தழை- சிறிதளவு
வெங்காயம், தக்காளி- 2
தயிர்- கால் கிண்ணம்
கரம் மசாலா மிளகு தூள்- கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள்- கால் தேக்கரண்டி
பட்டை பிரியாணி இலை-1
கிராம்பு, ஏலக்காய்-  தலா 2
எண்ணெய்- 2 தேக்கரண்டி
நெய்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

ADVERTISEMENT

உருளைக்கிழங்கை  ஊசியில் குத்திவிடவும். பிறகு அத்துடன் உப்பு, மிளகாய்த் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். அரிசியை கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.  குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய், நெய் சேர்த்து சூடானவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு பொரிய விடவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, புதினா, கொத்துமல்லித் தழை என ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து நன்கு வதக்கி, 2 கிண்ணம் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு ஊறவைத்த அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி, 3 விசில் வந்தவுடன் இறக்கி, சூடாக பரிமாறவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT