மகளிர்மணி

மழைக்காலத்தில் பயன்படுத்துவது எப்படி?

20th Nov 2022 06:00 AM | செளமியா சுப்ரமணியன்

ADVERTISEMENT

 

தற்போதைய வாழ்க்கை சூழலில் மின்சாரம் இன்றி எதுவுமே இல்லை என்றாகிவிட்டது.  தினசரி பணிகளை எளிதாக்க மின்சாரம் முக்கிய இடத்தில் உள்ளது. ஆனால், சரிவர பராமரிக்காமல் இருக்கும்போது பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் மின்சாதனங்களைக் கவனமாகக் கையாள வேண்டும்.

இதற்கான வழிமுறைகள்:

வெறும் கால்களாலும், ஈரமான கைகளாலும் மின்சாதனங்களைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

ADVERTISEMENT

பழுதடைந்த உபகரணங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

உடைந்த பிளக் காரணமாக,  ஷார்ட் சர்க்யூட் பிரச்னைகள் உண்டாக வாய்ப்புள்ளது.  உபகரணங்களைத் துண்டிக்கும்போது, பவர் பாயின்ட்களை அணைக்க மறக்காதீர்கள்.

மைக்ரோவேவ் பயன்படுத்தும்போது அலுமினியம் ஃபாயில்,  உலோகத் தகடுகளை உள்ளே வைக்கக் கூடாது.

கிச்சன் அல்லது ஷிங்க் அருகில் உள்ள சுவிட்ச் போர்டுகள், பாத்ரூமில் உள்ள பாத் டப்,  நீச்சல் குளங்கள், பிற ஈரமான பகுதிகளில் உள்ள சுவிட்சுகள் நல்ல நிலையில் உள்ளதா என அடிக்கடி சரிபார்க்கவும்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுவிட்சுகள் தன்மையை உறுதிப்படுத்தி, தேவைப்படும்போது மாற்றிக்கொள்ளவும்.

டிரிம்மர், ஷேவர், ஹேர் டிரையர், ஹேர் ஸ்ரெய்ட்டனிங் போன்றவற்றை பயன்படுத்திய பின்னர், முறையாக அணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும். 

ஹீட்டர் வசதி இல்லாத நிலையில் ஒருசிலர் கையடக்க மின்சார ஹீட்டர்களை பயன்படுத்தும்போது,  குழந்தைகளிடம் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் சூடாகிவிடதா என கை வைத்து பார்க்க கூடாது.

வீட்டை விட்டு எங்கேயாவது வெளியே செல்லும் போது மறக்காமல் ஹீட்டர்கள், ஏசி, அவன் போன்றவற்றின் முக்கிய பிளக் பாயின்ட் சுவிட்சுகளை அணைக்கவும். 

வெப்பத்தை வெளிப்படுத்தக்கூடிய கணினி மானிட்டர், டி.வி, போன்றவை இருக்குமிடத்தில் காற்றோட்டம் இருப்பது சிறப்பானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT