மகளிர்மணி

ஊக்குவிப்பு எல்லாருக்கும் தேவை...!

20th Nov 2022 06:00 AM | பொ.ஜெயச்சந்திரன்

ADVERTISEMENT

 

கேளம்பாக்கம் அரசுப் பள்ளியில் படித்து - அரசு ஒதுக்கீட்டில் ஆயர்வேத மருத்துவக் கல்லூரியில் படிப்பு, தென் சென்னை தமிழ்ச் சங்கத் தலைவர்,  சமூக ஊடகங்களில் கவிதை பயிற்சி அளிப்பவர்,  விருதுகள் பல பெற்றவர் எனப் பல்வேறு திறமைகளைக் கொண்டவர் ம.ஜீவரேகா.

இவரிடம் பேசினோம்.

ஆயுர்வேத மருத்துவம் குறித்து?

ADVERTISEMENT

 நம் பாரம்பரியத்தில் வந்த மருத்துவம்.  19 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறேன். கரோனா காலத்திலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தேன். 

தென் சென்னைத் தமிழ்ச்சங்கத் தொடக்கமும், முன்னேற்றமும் குறித்து?

ஊக்குவிப்பு எல்லோருக்கும் தேவை என்ற காரணத்துக்காக,  6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டதே தென் சென்னைத் தமிழ்ச்சங்கம். 2017-ஆம் ஆண்டில் 150 படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து விருதுகளை அளித்து பெருமைப்படுத்தினோம்.  2018, 2019-ஆம் ஆண்டுகளில் தமிழில் முதலிடம் பெற்ற 16 மாணவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரத்தை வழங்கினோம்.  2019-இல் 21அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரத்தை  வழங்கினோம்.

ஆண்டுதோறும் மகளிர் தின விழாவில், 10 மகளிருக்கு சிறப்பு விருதுகளை வழங்கிக் கெளரவிக்கிறோம்.

இனி பாரதி பற்றாளர்களுக்குத் தலா ரூ.10 ஆயிரம்  வழங்கும் பணியையும் செய்யத் தொடங்கியிருக்கிறோம்.

கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டானது எப்படி?

கல்லூரியில் படிக்கும்போது, இயற்கையைப் பற்றியும், காதலைப் பற்றியும் கவிதைகள் எழுதினேன்.  முகநூலில் "டாக்டர் ஜீவாவின் கவிதைப் பூங்கா'  என்ற அமைப்பைத் தொடங்கி, புதிதாய் எழுத வருபவர்களுக்காக மரபு, ஹைக்கூ கவிதைப் பயிற்சிகளை வழங்கினேன்.  "காற்றுக்கென்ன வேலி' எனும் கவிதை நூலை புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி 2016-ஆம் ஆண்டில் வெளியிட்டார். 

தற்போதுவரை 5 கவிதை நூல்களையும், 5 கவிதைத் தொகுப்பு நூல்களையும் வெளியிட்டிருக்கிறேன். பாரதியார் குறித்த ஒரு கட்டுரை நூலும்,  வேறு சில நூல்களும் பதிப்புக்கான தயாரிப்பில் இருக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT