மகளிர்மணி

சோள இடியாப்பம் 

13th Nov 2022 06:00 AM | லோ.சித்ரா

ADVERTISEMENT

 

தேவையான பொருள்கள்:

வெள்ளைச் சோள மாவு- 1 கிண்ணம்
தண்ணீர்- அரை கிண்ணம்
கல் உப்பு- தேவையான அளவு
தேங்காய் எண்ணெய்- 2 தேக்கரண்டி

செய்முறை:

ADVERTISEMENT

வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றவும். சூடேறியதும் வெள்ளைச் சோள மாவை அதில் போட்டு, 5 நிமிடங்கள் வாசனை வரும் வரை கைவிடாமல் வறுக்கவும். அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும். வறுத்த வெள்ளை சோள மாவை நன்கு ஆற விடவும்.

தேவையான கல் உப்பை அரை கிண்ணம் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும்.  தண்ணீர் கொதித்ததும் இறக்கி வறுத்து ஆறிய வெள்ளைச் சோள மாவில் சிறிது, சிறிதாகச் சேர்த்து பிசையவும். மாவைப் பிசையும்போது சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

இறுதியில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை சேர்த்து ஒன்றாகத் திரட்டவும். பிறகு இடியாப்பங்கலை இட்லி பாத்திரத்தில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். தேங்காய் பால், சாம்பார், குருமா ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT