மகளிர்மணி

முளை கட்டிய பயறு இடியாப்பம்

13th Nov 2022 06:00 AM | லோ.சித்ரா

ADVERTISEMENT

 

தேவைப்படும் பொருள்கள்:

முளை கட்டிய பயறு- 1 கிண்ணம்
இடியாப்ப மாவு- 2 கிண்ணம்
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
குடை மிளகாய்- 1 (நறுக்கிக் கொள்ளவும்)
மிளகாய்த் தூள்- 1 மேசை கரண்டி
கொத்துமல்லித் தழை- சிறிதளவு
கடுகு- சிறிதளவு
பெருங்காயத் தூள்- சிறிதளவு
எண்ணெய்- 4 மேசை கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

ADVERTISEMENT

இடியாப்ப மாவை வெந்நீர் விட்டு பிசைந்து,  இட்லி தட்டில் இடியாப்பமாகப் பிழிந்து ஆவியில் வேக வைக்கவும். சிறிது ஆறிய பிறகு உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கி முளை கட்டிய பயறு, பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து குடை மிளகாயும் சேர்த்து  கால் டம்பளர் நீர்விட்டு, 5 நிமிடம் மூடிவிடவும். தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்து விடவும். இதனுடன் உதிர்த்த இடியாப்பத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொத்துமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT