மகளிர்மணி

குழந்தையை சட்டப்படி தத்து எடுப்பது எப்படி?

பாரத்


மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டும் குழந்தை பாக்கியம் இல்லாத சூழ்நிலைகளில்தான் தம்பதியர், சட்டப்படியாக குழந்தையைத் தத்து எடுக்கும் முடிவுக்கு வருகின்றனர். இந்தியாவில் குழந்தையில்லா தம்பதியர்கள், சட்டப்படியே குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள எல்லா வழிமுறைகளும் உள்ளன.

முதல் வழிமுறை: தத்து எடுக்க விரும்பும் பெற்றோர், தத்து கொடுக்க விரும்பும் பெற்றோரிடம் இருந்து தத்தெடுப்பது. இந்த முறை எளிதானது. இந்து, பௌத்தம், சீக்கியம், ஜெயின் மதங்களைச் சேர்ந்தவர்கள் ‘இந்து தத்தெடுத்தல், பராமரித்தல் சட்டம்-1956' மூலமாகவும், முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சார்ந்தவர்கள் "கார்டியன்ஸ் அன்டு வார்ட்ஸ் ஆக்ட்-1890' மூலமாகவும் குழந்தைகளைத் தத்தெடுக்கலாம்.

தத்து எடுக்கும், கொடுக்கும் பெற்றோர், தத்தெடுப்பதற்கான பத்திரத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், பதிவு செய்வதற்குமுன் இதன் சம்பிரதாயங்களை முடிப்பது அவசியம்.

இரண்டாம் வழிமுறை: தற்போது ஓரிரு குழந்தைகளையே தம்பதியினர் கொண்டுள்ளதால், யாரும் தத்து கொடுப்பதற்கு முன்வருவதில்லை. தத்து எடுக்கப்படும் குழந்தைகளை சட்டத்துக்குப் புறம்பான செயல்களுக்கு உட்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும், குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வுக்காகவும் இந்த சட்ட வழிமுறைகள் சற்றே கவனத்துடன் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தத்து எடுக்க விரும்பும் பெற்றோர் நல்ல மனநிலை, உடல்நிலை, பொருளாதார நிலையுடனும் இருக்க வேண்டும். தனி பெண்மணியால் இருபால் குழந்தைகளையும் தத்தெடுக்க முடியும். ஆனால், தனி ஆண்மகனால் பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது. திருமணமான தம்பதியர் குறைந்தது இரண்டு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகே தத்தெடுக்க முடியும்.

4 வயது வரையிலான குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் தம்பதியரின் கூட்டு வயது 90-க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதுவே தனி பெற்றோராக இருக்கும்பட்சத்தில் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

4 முதல் 6 வயது வரையிலான குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் கணவன், மனைவி ஆகிய இருவரின் கூட்டு வயது 100-க்கு மிகாமல் இருக்க வேண்டும். தனி பெற்றோராக இருந்தால் 50 வயது வரை இருக்கலாம்.

8 முதல் 18 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியரின் கூட்டு வயது வரம்பு 110-க்கு மிகாமல் இருக்க வேண்டும். தனி பெற்றோராக இருந்தால் 55 வயது வரை இருக்கலாம். குழந்தை மற்றும் தத்து எடுக்க விரும்பும் பெற்றோரில் யாரேனும் ஒருவரது வயது இடைவெளி 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். 4 குழந்தைகளுக்கு மேல் ஒருவர் / தம்பதியினர் தத்தெடுக்க முடியாது. இந்தியா மற்றும் வெளிநாட்டவர் இந்தமுறை மூலம் முறையான அனுமதியுடன் தத்தெடுக்கலாம்.

செயல்முறைகள்:

தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் தங்கள் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். இதற்காக, காரா' (இஅதஅ-இங்ய்ற்ழ்ஹப் அக்ர்ல்ற்ண்ர்ய் தங்ள்ர்ன்ழ்ஸ்ரீங் அன்ற்ட்ர்ழ்ண்ற்ஹ்) வலைதளத்தில் (ஸ்ரீஹழ்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய்) அதற்கான விண்ணப்பம் கிடைக்கும். இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவு செய்த நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்க வேண்டும்.

அநாதைகள் இல்லம், ஆதரவற்ற அமைப்புகள், தன்னார்வ விடுதிகள் (என்ஜிஓ) மூலம் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளின் புகைப்படங்கள் வலைதளத்தில் காண்பிக்கப்படும். தாங்கள் விரும்பும் குழந்தையைத் தேர்வு செய்ய முடியும். இதற்காக அமைக்கப்பட்ட குழு, தத்தெடுக்கப்பட்ட பெற்றோரின் மருத்துவ, உடல்நிலை, மனநிலை, பொருளாதார நிலை, வாழ்க்கைச்சூழல் ஆகிய அம்சங்களை ஆராய்ந்து அறிக்கையை அளிக்கும்.

தகுதியான பெற்றோர் குழந்தையைத் தத்து எடுத்தவுடன் அரசு சாரா இயக்கம் அல்லது இல்லம் குழந்தையைத் தத்து கொடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும். இவ்வாறு குழந்தையைத் தத்தெடுக்கலாம். இதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகலாம். தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வாழ்க்கைமுறை அவர்களின் 18 வயது வரை கண்காணிக்கப்படும்.

இடையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், குழந்தையை திரும்பப் பெற்றுக் கொள்ளும் அதிகாரம் அரசுக்கு உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT