மகளிர்மணி

எளிய வைத்தியம்

22nd May 2022 06:00 AM | முக்கிமலை நஞ்சன், சி.ஆர்.ஹரிஹரன்.

ADVERTISEMENT


கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகுகளைத் திணித்து, திறந்தவெளியில் ஓர் இரவு வைத்து மறுநாள் காலையில் இந்த மிளகுகளைச் சாப்பிட இருமல் நீங்கும்.

தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து, 40 நாள்களுக்குச் சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்லபலம் ஏறும். உடலில் சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் ஏற்படும்.

மாதவிலக்கு வயிற்றுவலி நீங்க அதிகாலையில் 9 துளசி இலைகளை மென்று நின்று நீர் பருகி வர வலி நீங்கும்.

துளசி இலையுடன் கொஞ்சம் உப்பையும் சேர்த்து, நன்றாகக் கசக்கி பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் வலி குறையும்.

ADVERTISEMENT

மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து, தேனுடன் கலந்து உட்கொண்டால் வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.

ஒரு டம்ளர் எலுமிச்சைப் பழச்சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன் வைத்து, குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

தேனுடன் மாதுளம் பழச்சாறு கலந்து ஒரு மாதம் காலம் அருந்தி வந்தால் ரத்தச் சோகை நீங்கும். 

இரவில் படுக்கச் சொல்லும் முன் தேனையும் வெங்காய துண்டுகளையும் மிதமான சுடுநீரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.

 வாழைக்காயைப் பயன்படுத்தியதும், அதன் தோலை வேக வைத்து துவையல் வைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண், அல்சரில் நிவாரணம் கிடைக்கும்.

எலுமிச்சை பழத் தோலைக் காயவைத்து, பொடி செய்து பல் துலக்கிவந்தால் வாய்துர்நாற்றம் இருக்காது.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிள்ளைகளுக்கு எலுமிச்சை சாறுடன் தேனை கலந்து கொடுத்தால், அந்தப் பழக்கம் மெல்ல நின்றுவிடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT