மகளிர்மணி

பற்களை பாதுகாப்போம்

மருத்துவர் கௌரிசங்கரி

இப்போது பல் தொடர்பான நோய்களும் அதிகரித்து வருகின்றன. பற்களைப் பாதுகாத்தால் நோய்களை வராது செய்யலாம்.

உடல் சுகாதாரத்தைப் பேணி காப்பதே போல, வாய் சுகாதாரத்தையும் பராமரிக்க வேண்டும்.  நாள்தோறும் இரு முறை நன்றாக பல் துலக்க வேண்டும். உணவு அருந்திய பின்னர், வாய் கொப்புளித்தலும் சிறந்தது.

பல்களை துலக்கினாலும் போதாது; ஈறுகளையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். உணவில் மீதமாகி தேங்கும் சிறு துகள்களே பாக்டீரியாக்களை உருவாக்கி நோய் உண்டாக்கும் அமிலத்தை உண்டாக்குகின்றன.

கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவுகளால் உண்டாகும் பாக்டீரியாவே பல் சொத்தைகளை உருவாக்குகின்றன.

முன் பற்களைச் சுத்தம் செய்யும் அளவுக்கு பின்பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

டீ, காபி,  குளிர்பானங்கள்,  இனிப்புகளை குறைவான அளவே எடுத்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது.

மன அழுத்தம், கவலை, பயம் போன்றவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.

ஊட்டச்சத்து குறைபாடும் பல் வலி, சொத்தை போன்றவற்றுக்குக் காரணம். உமிழ்நீர் சுரப்பு குறைவும் பல் நோய்க்குக் காரணமாக அமைகிறது.

பல் சொத்தை ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்வது அவசியம். இல்லையெனில்,  ஆழமாகிவிட்டால் வேர் சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும். பல் சொத்தையை கவனிக்காமல் விட்டால் வேர் வரை சென்று, சீழ் பிடிக்க ஆரம்பித்து பெரிதாகிவிடும். உடனுக்குடன் பல் சிகிச்சையை மேற்கொள்வது அவசியம்.

அடிக்கடி பல் பிரச்னைகளைக் கொண்டுள்ளவர்கள் பாக்டீரியாவைத் தடுக்கும் மவுத் வாஷ் உபயோகிப்பது நல்லது. ஆண்டுக்கு இரு முறை பல் மருத்துவரை சந்தித்து ஆலோசிப்பது நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

SCROLL FOR NEXT