மகளிர்மணி

வாழைத் தண்டு வடாம்

8th May 2022 05:10 PM | ஆர்.ஜெயலெட்சுமி

ADVERTISEMENT

 


தேவையானவை:

பச்சரிசி- 200 கிராம்
ஜவ்வரிசி- 100 கிராம்
வாழைத் தண்டு-1
மிளகாய் -4
பெருங்காயப் பொடி- 1 தேக்கரண்டி
எண்ணெய்- 1 தேக்கரண்டி
தக்காளி-2
உப்பு-தேவையான அளவு

செய்முறை: 

ADVERTISEMENT

பச்சரியை நீர்விட்டு 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஜவ்வரிசியை நீர்விட்டு, இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வாழைத் தண்டை பொடியாக நறுக்க வேண்டும். தக்காளியை சாறெடுக்க வேண்டும். பச்சரிசியை அரைத்து கூடவே ஜவ்வரிசி, மிளகாய்,  தக்காளிச் சாறு, வாழைத் தண்டு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்தெடுக்க வேண்டும்.

கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தேவையான தண்ணீரைவிட்டு கொதி வந்ததும் கூழ்மாவை கொஞ்சம்  தண்ணீரில் கரைத்து ஊற்றி எண்ணெய் விட்டு நன்றாகக் கூழாக்க வேண்டும். 

கையில் ஒட்டாமல் வர வேண்டும். ஒரு வெள்ளைத் துணியை வெயிலில் விரித்து, கூழ்மாவை சிறு உருண்டைகளாக வைத்து வெயிலில் நன்றாக காய வைத்து எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT