மகளிர்மணி

தினை வடாம்

8th May 2022 05:07 PM | ஆர்.ஜெயலெட்சுமி.

ADVERTISEMENT

 

தேவையானவை:

தினை மாவு- 200 கிராம்
பூண்டு- 4 பல்
வெங்காயம்-4
உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

ADVERTISEMENT

பூண்டு, வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக நறுக்க வேண்டும். கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீரைவிட்டு கொதிக்க வைத்து தினைமாவை சிறிது தண்ணீர்விட்டு கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கிளறும்போது பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி கெட்டியானவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வெள்ளைத் துணியை வெயிலில் விரித்து மெல்லிய வட்டங்களாக இட்டு நன்றாகக் காய்ந்ததும் விரித்து எடுத்து வைக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT