மகளிர்மணி

சிவப்பரிசி வடாம்

8th May 2022 05:05 PM | -ஆர்.ஜெயலெட்சுமி

ADVERTISEMENT

 

தேவையானவை: 

சிவப்பு அரிசி- 250 கிராம்
ஜவ்வரிசி- 100 கிராம்
பச்சை மிளகாய்-4
பெருங்காயத்தூள்- 1 தேக்கரண்டி
சீரகம்- 3 தேக்கரண்டி
உப்பு- தேவையானது

செய்முறை: 

ADVERTISEMENT

சிவப்பு அரிசியைக் களைந்து தண்ணீர் ஊற்றி, ஆறுமணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஜவ்வரிசியையும் தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியை அரைக்கும்போது, பாதி அரைப்பட்டவுடன் சீரகம், ஜவ்வரிசி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். கனமான பாத்திரத்தை தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு அரைத்த மாவை கொஞ்சம், கொஞ்சமாக விட்டு கைவிடாமல் கிளறி பெருங்காயப் பொடி சேர்க்க வேண்டும். மிதமான தீயில் இறக்கி முறுக்கு அச்சில், எண்ணெய் தடவி மாவைப் போட்டு சுத்தமான வெள்ளைத் துணியை விரித்து பிழிந்து வெயிலில் காயவைத்து, காய்ந்ததும் உரித்து எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT