மகளிர்மணி

கொள்ளு கருப்பு உளுந்து வடை

DIN


தேவையானவை: 

முளைவிட்ட கொள்ளு- 200 கிராம்
கருப்பு உளுந்து- 50 கிராம்
பச்சரிசி- 1 தேக்கரண்டி
புதினா, கறிவேப்பிலை, 
கொத்தமல்லித் தழை- தேவையான அளவு
பச்சை மிளகாய்-4
சின்ன வெங்காயம்- கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
உப்பு, சோம்பு- சிறிதளவு
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

கறுப்பு உளுந்து, அரிசியைக் கழுவி மூழ்கும் அளவு நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். முளைவிட்ட கொள்ளு, ஊற வைத்த கருப்பு உளுந்து (தோல் நீக்க வேண்டாம்), ஊற வைத்த அரிசி, பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லித் தழை, புதினா, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயைச் சூடாக்கி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மாவுக் கலவையை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு சிவக்கப் பொரித்தெடுக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT